கனடா சிறையில் 35ஆண்டு காலம் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்ணின் வாழ்வில் நடந்தது என்ன?

Report Print Balamanuvelan in கனடா

இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணின் காதலர் அவரை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை கைப்பிடிக்க செல்ல, அதன் விளைவாக நடந்த மோசமான விடயங்கள் அந்த பெண்ணின் வாழ்வை தலைகீழாக மாற்றிவிட்டன.

கனடாவின் ஒண்டாரியோவில் வசித்து வந்தவர் Amina Chaudhary. அவரை காதலித்து கர்ப்பமாக்கிய அவரது காதலர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இந்தியாவுக்கு போய்விட்டார்.

இது நடந்தது 1982ஆம் ஆண்டு. இந்த செய்தி தெரிந்ததும், Amina கோபத்தில் தனது காதலரின் உறவினரான எட்டு வயது சிறுவனை கொலை செய்து விட்டதாக கைது செய்யப்பட்டார்.

ராஜேஷ் குப்தா என்னும் அந்த சிறுவன் தலையில் பலமாக தாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தான்.

அவனது உடல் ஒரு அட்டைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு, வழக்கமாக Aminaவும் அவரது காதலரும் சந்திக்கும் இடத்தில் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் கைது செய்யப்பட்ட Amina, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தனது உறவினர் ஒருவரால் தாக்கப்பட்டிருந்ததால், ஒரு ஆளைக் கொல்லும் அளவுக்கு தனக்கு பலம் இல்லை என்றும் வாதிட்டார்.

ஆனால் அதற்கு ஆதாரமாக அந்த சிறுவனின் தலையில் அடிபட்டிருந்ததைக் காட்டும் புகைப்படங்களை வைத்து ஆராயலாம் என்றால் அவை காணாமல் போய்விட்டன.

எனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Amina, தொடர்ந்து தான் நிரபராதி என வாதிட்டு வந்ததாலும், மற்றவர்கள் மீதே பழி போட்டு வந்ததாலும் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்படாமலே இருந்தது.

இதற்கிடையில், சிறையில் மற்றொரு குற்றவாளியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் Amina.

அவருக்கு 2005க்கு பிறகு அவ்வப்போது குறைந்தபட்ச ஜாமீன் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், அதற்கு பிறகு Aminaவின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் காணப்பட்டது.

மற்றவர்களுடன் பழகும் விதத்திலும், தனது குற்றத்திற்கு தான் பொறுப்பேற்றுக் கொண்டதிலும், தனது காவல் அதிகாரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொண்டதிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் கவனித்தபின் தற்போது Aminaவுக்கு முழுமையான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

உடல் நலமின்றி இருக்கும் தனது கணவர், பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் தனது தத்துக் கொடுக்கப்பட்ட மகன், மற்ற பிள்ளைகள் என அனைவரோடும் தனது மீதி ஆயுள் காலத்தை செலவு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார் Amina.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்