கனடிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய தமிழர்! யார் அவர்?

Report Print Raju Raju in கனடா

ஜப்பானுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஜெய்சங்கர் தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார்.

அங்கு கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், மெக்ஸிகோ வெளியுறவுத் துறை அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், ஜி20 மாநாட்டையொட்டி, கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியா-கனடா நாடுகளின் நலன்களை பிரதிபலிக்கக் கூடிய நிலையான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்கப்படுகிறது.

அதேபோல், மெக்ஸிகோ வெளியுறவுத் துறை அமைச்சர் மார்செலோ எப்ரார்டுடன், இந்தியா-மெக்ஸிகோ இடையேயான சிறப்பான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்