என் உடல் நடுங்கியது! திடீரென பெரும் கோடீஸ்வரர் ஆனது குறித்து விளக்கிய நபர்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லொட்டரி மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆன நபர் அந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து பகிர்ந்துள்ளார்.

கனடாவின் வின்னிபெக் நகரை சேர்ந்தவர் டான் ஹும்னிஸ்கி. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவரின் வாழ்க்கை கடந்த 14ஆம் திகதி மாறியது.

லொட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் கொண்ட டானுக்கு பம்பர் பரிசாக $9.5 மில்லியன் விழுந்துள்ளது.

இதன் மூலம் திடீரென கோடீஸ்வரர் ஆகியுள்ள டான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார்.

அவர் கூறுகையில், பரிசு விழுந்த தகவல் எனக்கு கிடைத்ததும் என் மனைவிக்கு போன் செய்தேன்.

இது குறித்து என் மனைவிடம் சொல்வதற்கு முன்னர் என் உடல் நடுங்க தொடங்கியது, என் வாயில் இருந்து வார்த்தைகள் வராமல் திக்குமுக்காடி போனேன்.

பின்னர் நீ அவசர உதவி எண்ணுக்கு போன் செய்யும் நிலை வந்துவிடும் என அவளிடம் கூறிவிட்டு லொட்டரியில் பரிசு விழுந்த விடயத்தை கூறினேன்.

இனி என் வாழ்க்கையில் பண பிரச்சனையே வராது.

பரிசு பணத்தை வைத்து முதலில் புது கார் வாங்குவோம். பணியில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...