சாலை விபத்தில் சிக்கி கனேடிய பெண் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு அதிர்ந்த குடும்பம்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் சாலை விபத்தில் சிக்கி பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி என கருதப்பட்டவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் Bayview Extension பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி இந்த சாலை விபத்து நடந்துள்ளது.

இதில் 35 வயதான Svetlana Koretskaia என்ற பெண்மணி சிக்கி பின்னர் மரணமடைந்துள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட 40 வயதான குகதீஷ் ராசரத்னம் மீது போதிய ஆதாரம் இல்லை எனவும்,

அவரது காதலி அளித்த வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும்படியாக உள்ளது என்பதாலும், நீதிமன்றம் குகதீஷ் ராசரத்னத்தை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறும் கொல்லப்பட்ட Koretskaia என்பவரின் சகோதரி, சட்டத்திற்கு முன்னர் ராசரத்னம் குற்றவாளி இல்லை என விடுவிக்கப்படலாம்,

ஆனால் சம்பவத்தின்போது அவர் மேற்கொண்ட முட்டாள்த்தனமான முடிவு ஒரு உயிரை அபாண்டமாக பறித்துள்ளது.

சாலையில் எவரும் இல்லை என்பதால் தனது வாகனத்தை திடீரென்று திருப்பியதே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது சகோதரி எப்போதுமே சாலை விதிகளை மதிப்பவர் என கூறும் அவர், ஒருபோதும் அதிக வேகத்தில் தமது இருசக்கரவாகனத்தை செலுத்தியது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers