சென்னையில் வந்து தங்கிய கனடா தம்பதி... ஹொட்டல் அறைக்குள் சென்ற போது அவர்கள் கண்ட காட்சி

Report Print Raju Raju in கனடா

சென்னையில் உள்ள சொகுசு ஹொட்டலில் தங்கியிருந்த கனடிய தம்பதி அளித்துள்ள புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கனடாவை சேர்ந்த தம்பதி சென்னைக்கு வந்துள்ள நிலையில் மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹொட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இருவரும் வெளியில் சென்றுவிட்டு ஹொட்டல் அறைக்கு திரும்பினார்கள்.

அப்போது நான்கரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 ஆயிரம் கனடா டொலர்கள் மாயமானதை கண்டுபிடித்தார்கள்.

இதையடுத்து பணம் காணாமல் போனது தொடர்பாக ஹொட்டல் நிர்வாகத்திடம் தம்பதி முறையிட்டனர்.

இது தொடர்பாக ராயப்பேட்டை பொலிசில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்