காதலனை மகிழ்விப்பதற்காக சொந்த பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

Report Print Balamanuvelan in கனடா

தனது காதலனின் அன்பை பெறுவதற்காக பெற்ற பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஒரு பெண், தானும் சிறு வயதில் மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கனடாவின் Bedford பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்கு தாயாகிய ஒரு பெண், அமெரிக்கர் ஒருவரை காதலித்திருக்கிறார்.

அவரை மகிழ்விப்பதற்காக தனது பிள்ளைகளில் சிலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதை இணையம் வழியாக நேரடியாக தனது காதலனுக்கு காட்டியுள்ளார்.

அந்த பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்யாத நேரத்தில், தனது மூத்த மகளுடைய படுக்கையறையிலும் குளியலறையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெமராவில் பதிவான நிர்வாண காட்சிகளை தனது காதலனுக்கு சமூக ஊடகம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார் அவர்.

ஏற்கனவே அந்த பெண்ணின் காதலர் கைது செய்யப்பட்டு 26 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

விசாரணையில் அந்த பெண்ணும் தனது சிறு வயதில் அவரது தோழி ஒருவரின் தாத்தாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதும், உறவினர்கள் வீட்டில் ஆபாச படங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்களை பார்த்து அருவருப்பு அடைந்திருக்கிறேன், ஆனால் இப்போது நானே அதே தவறுகளை செய்திருக்கிறேன், ஏன் இப்படி ஆகி விட்டேன் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார் அந்த பெண்.

ஆகஸ்டு மாத இறுதியில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers