கானாவில் கனேடிய இளம்பெண்கள் இருவர் கடத்தல்: ஒருவரின் புகைப்படம் வெளியானது!

Report Print Balamanuvelan in கனடா

கானா நாட்டில் கனேடிய இளம்பெண்கள் இருவரை துப்பாக்கி முனையில் சிலர் கடத்திச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கனேடிய இளம்பெண்கள் இருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற நபர்களை பாதுகாப்பு படையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.

Kumasi நகரிலுள்ள மதுபான விடுதி அமைந்திருக்கும் பகுதிக்கு திடீரென வந்த ஒரு கூட்டம் துப்பாக்கி ஏந்திய நபர்கள், அந்த இளம்பெண்களை கட்டி தூக்கிச் சென்றதாக தெரிகிறது.

கடத்தப்பட்டவர்களில் ஒருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதோடு, அவரது பெயர் Lauren என்று தெரியவந்துள்ளது.

அவரும் மற்றொரு பெண்ணும் பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவ பரிமாற்ற திட்டத்தின் கீழ் கானாவுக்கு சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் கனேடிய தூதரகமும் கானா பொலிசாரும் இணைந்து ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அந்த இளம்பெண்களை கடத்தியவர்கள், கனேடிய தூதரகத்தையோ அல்லது அந்த பெண்களின் குடும்பத்தினரையோ தொடர்பு கொண்டு பிணைத்தொகை ஏதாவது கேட்டுள்ளார்களா என்பது குறித்த விவரங்களும் தெரியவரவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்