கனடியர்களை பாதுகாக்க... அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Report Print Basu in கனடா

கனடாவில் அதிகரித்து வரும் மோசடி குடியேற்ற ஆலோசகர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற அந்நாட்டு அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் உதவும் என கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் அகமது ஹுஸன் தெரிவித்துள்ளார்.

அரசு மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கைகள், குடியேற்ற ஆலோசகராக விரும்புவர்கள் இனி கட்டாயமாக புதிய பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மோசடி குடியேற்ற ஆலோசகர்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச குற்றவியல் அபராதம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோசடி குடியேற்ற ஆலோசகர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இழப்பீட்டு நிதி உருவாக்கப்பட்டுள்ளது என கனடாவின் குடிவரவு அமைச்சர் ஹுஸன் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்