இந்தியாவில் பாஜகவின் மிகப் பெரிய வெற்றி... கனடா பிரதமர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Santhan in கனடா

மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 343 இடங்களில் முன்னிலை வகித்தது. குறிப்பாக 303 இடங்களில் பாஜக மட்டும் தனித்து வெற்றியை உறுதி செய்தது.

இப்படி ஒரு வரலாற்று வெற்றியை பெற்றிருக்கும் பாஜகவிற்கு உலகில் இருக்கும் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் கூறுகையில், மீண்டும் வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கனடா வாழ் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம், முதலீடு, வாழ்க்கை சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்