இந்திய இளம்பெண் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் வாழ்ந்து வந்த இந்திய இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது காதலரின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் சர்ரே பகுதியில் வசித்து வந்த பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றவர் அதற்குப்பின் வீடு திரும்பவில்லை.

பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

அவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்த பொலிசார், கிரண்தேசியின் காதலரான ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவரைக் கைது செய்தனர்.

அத்துடன் மேலும் சிலருக்கும் கொலை தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியும் என்றும் தாங்கள் நம்புவதாகவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.

வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட டியோ காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்நிலையில், கிரண்தேசி கொலை வழக்கில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள கிரண் தேசியின் காதலரான ஹர்ஜோத் சிங் டியோவின் தாய்!

நீதிமன்ற ஆவணங்களின்படி, ஹர்ஜோத் சிங் டியோவின் தாயாகிய Manjit Kaur Deo (53) கிரண் தேசியின் கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Manjit Kaur Deo வரும் செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers