கனடாவில் 10 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து... அதிகளவு இரத்தம் வெளியேறியதாக தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 10 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

வடக்கு டொரண்டோவின் Jane and Chalkfarm பகுதியில் தான் இச்சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், 10 அல்லது 11 வயதுடைய சிறுவனை மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவ இடத்துக்கு நாங்களும், ஆம்புலன்ஸும் வந்த நிலையில் சிறுவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம்.

இதையடுத்து குற்றவாளியை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

இதனிடையில், கத்திக்குத்து பட்ட சிறுவனுக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதாகவும், அவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் முதலில் தகவல் வந்த நிலையில் அவன் உயிருக்கு ஆபத்தில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்