இரத்தம் சொட்ட சொட்ட 10 கிலோமீற்றர் தூரம் ஓடிய பெண்: கனேடிய பெண்ணின் துணிச்சல்!

Report Print Balamanuvelan in கனடா

கத்தியால் குத்தப்பட்ட ஒரு கனேடிய பெண் இரத்தம் சொட்ட சொட்ட 10 கிலோமீற்றர் தூரம் ஓடி பொலிசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் கொலைகாரன் ஒருவன் உடனடியாக பொலிசாரிடம் சிக்கினான்.

விர்ஜினியாவில் Wythe பகுதியிலிருந்து பொலிசாருக்கு ஒருவர் கத்தியால் மற்றொருவரை குத்தியதாக தகவல் கிடைத்தது.

பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் பொலிசாரை அழைத்த நோவா ஷ்கோஷியாவை சேர்ந்த ஒரு பெண், தன்னை ஒருவர் கத்தியால் குத்தியதோடு அடிக்கவும் செய்ததாக தகவல் அளித்தார்.

கனடாவைச் சேர்ந்த அந்த பெண், தாக்கப்பட்டதும் இறந்ததுபோல் கிடந்திருக்கிறார். அவரை கத்தியால் குத்திய நபர் அங்கிருந்து சென்றதும், அவர் எழுந்து அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

இரத்தம் சொட்டச் சொட்ட சுமார் 10 கிலோமீற்றர்கள் ஓடியபிறகே அவருக்கு உதவி கிடைத்திருக்கிறது.

தான் தாக்கப்பட்டிருந்தாலும் தன்னை தாக்கியவனைக் குறித்து அவர் கொடுத்த விவரங்கள்தான் உடனடியாக அந்த கொலையாளியை கண்டுபிடிக்க உதவியதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட James Jordan (30) மீது கொலை மற்றும் கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளன.

Ronald Sanchez Jr.(43) என்னும் நபரை கொலை செய்த அதே நபர்தான் அந்த கனேடிய பெண்ணையும் கத்தியால் குத்தியும் தாக்கியும் இருக்கிறார்.

அந்த பெண் தன்னை தாக்கியவன் ஒரு நாயுடன் இருந்ததாக பொலிசாரிடம் தெரிவித்திருந்தது விரைந்து குற்றவாளியை பிடிக்க மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்