மொத்த இலங்கை குடும்பமும் சேர்ந்து குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் உதவி: நெகிழவைக்கும் பின்னணி

Report Print Raju Raju in கனடா

இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடாவில் வசிக்கும் இலங்கை பெண்ணொருவர் குடும்பத்துடன் சேர்ந்து பேக்கிரி உணவு வகைகளை விற்பனை செய்யவுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் ஹன்சினி பமுனுவிகிதரா. இவர் தனது பெற்றோருடன் கனடாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் ஹன்சினி மற்றும் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஹன்சியும் அவர் குடும்பத்தாரும் முடிவெடுத்தனர்.

அதன்படி பேக்கிரி உணவுகளை தயாரித்து கனடாவில் உள்ள கல்லூரி மற்றும் பொதுநிகழ்ச்சி நடக்கும் இடங்களில் ஹன்சினி விற்பனை செய்யவுள்ளார்.

இதோடு தனது தந்தை லிண்டாவின் காபி ஷாப்பிலும் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வசூலித்து வருகிறார்.

வசூலாகும் மொத்த பணத்தையும் இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுக்கவுள்ளார் ஹின்சினி.

ஹின்சினி கூறுகையில், குண்டுவெடிப்பு செய்தியை முதலில் கேட்டவுடன் அது கெட்ட கனவு என நினைத்தேன், பின்னர் செய்திகளை பார்த்த பின்னரே அது உண்மை என உணர்ந்தேன்.

குண்டுவெடிப்பில் இலங்கையில் உள்ள என் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

என் தாய்நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்தது வேதனையளிக்கிறது. உங்கள் சொந்த நாட்டில் இப்படியொரு சம்பவம் நடக்கும் வரை அதை உங்களால் உணர முடியாது.

இது போன்ற விடயங்கள் இனி இலங்கையில் நடக்காது என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...