பிரபல கனேடிய நடிகை மர்ம மரணம்: தற்கொலை என பொலிசார் அறிவித்துள்ளதால் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in கனடா

பிரபல கனேடிய நடிகையும் மொடலுமான ஒருவர் அமைதியான முறையில் உயிரிழந்ததாக அவரது கணவர் தெரிவித்திருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கனேடிய மொடலான Stefanie Sherk தங்கள் வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் மூழ்கிக் கிடந்ததாக கூறி பொலிசாரை வரவழைத்திருகிறார் அவரது கணவரும் பிரபல நடிகருமான Demian Bichir (55).

Stefanieயின் மரணம் குறித்து பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்திகளில் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

முதலில் Stefanie நீச்சல் குளத்தில் மூழ்கிக் கிடந்ததாக பொலிசாரை அழைத்தது ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி காலை 7.28க்கு. இதை பொலிசார் உறுதி செய்துள்ளார்கள்.

ஆனால் ஏப்ரல் 20ஆம் திகதிதான் Stefanieயின் கணவர் Demian தனது மனைவி இறந்துபோனதாக செய்தி வெளியிட்டிருந்தார், அதுவும் அவர் அமைதியான முறையில் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று அவரது மரணம் குறித்து செய்தி வெளியிட்ட அரசின் மருத்துவ பரிசோதகர் Stefanieயின் மரணம் தற்கொலை என்றும், அவர் தண்ணீரில் மூழ்கி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூளை திசுக்கள் பாதிக்கப்பட்டதால் anoxic encephalopathy என்ற பிரச்சினையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சில பத்திரிகைகள் Stefanieயின் வயது 43 என்றும் சில பத்திரிகைகள் 37 என்றும் தெரிவித்துள்ளதால் அவரது மரணம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers