இளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி!

Report Print Balamanuvelan in கனடா

மெட்ரோ வான்கூவர் பகுதியில் வசிக்கும் இளம்பெண்களை குறிவைக்கும் ஒரு நபர், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இளம்பெண்களை தனியாக சந்திக்க விரும்புவதாக அழைப்பு விடுப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி ரியல் எஸ்டேட் போர்டின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இளம்பெண்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு மர்ம நபர், ரியல் எஸ்டேட் தொடர்பாக பேச, தன்னை சந்திக்க வருமாறு தொலைபேசியில் அழைக்கிறார்.

அத்துடன் தன்னை சந்திக்க வரும்போது தனியாக வர வேண்டும் என்றும், யாரையும் உடன் அழைத்து வரக்கூடாதென்றும் அவன் பெண்களை வற்புறுத்துகிறார் அந்த மர்ம நபர்.

இதுவரை இது குறித்த பல புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கும் மெட்ரோ வான்கூவர் ரியல் எஸ்டேட் போர்டின் தலைவரான ஆஷ்லி ஸ்மித், இளம்பெண்கள் தனியாக வர சம்மதிக்கவில்லையென்றாலோ, யாரையாவது உடன் அழைத்து வந்தாலோ அவனுக்கு கடும் கோபம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

டேவிட், ஷான் Z அல்லது லீ என்ற பெயர்களை பயன்படுத்தும் அந்த நபருக்கு சுமார் 30 வயது இருக்கலாம்.

இதுவரை அந்த நபர் குற்றச்செயல்கள் எதிலும் ஈடுபடாததால் பொலிசார் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை.

ஆனால் இதே போன்று ஒரு சூழலில் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்த தனது மகளை ஒரு நபர் சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் அவர் பயந்து துணைக்கு தனது ஆண் நண்பரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்ததாகவும் தெரிவிக்கிறார் Jeff Buziak என்பவர்.

ஆனால் அந்த ஆண் நண்பர் குறித்த நேரத்திற்கு வராததால் Jeffஇன் மகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இது நடந்தது 11 ஆண்டுகளுக்கு முன்பு. என்றாலும் பாதிக்கப்பட்ட Jeff, இந்த மர்ம நபர் குற்றச்செயலில் ஈடுபடும் வரை காத்திருக்காமல் பொலிசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers