கனடாவில் மாயமான இரண்டு டீன் ஏஜ் சிறுமிகள்.... பொலிசார் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு டீன் ஏஜ் பெண்கள் மாயமான நிலையில் பொதுமக்கள் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.

Saskatoon நகரை சேர்ந்த Shaunte Sparvier (13) மற்றும் Niki Scott (14) ஆகிய இரண்டு சிறுமிகளும் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போனார்கள்.

இருவரும் கடைசியாக Martenville நகரின் அருகில் உள்ள Ranch Ehrlo என்ற இடத்தில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதில் Shaunte 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் காணாமல் போன அன்று சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதே போல Niki 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் காணாமல் போன அன்று சாம்பல் நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பொதுமக்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்