பரபரப்பான சூழ்நிலையில் உதவிக்கு வந்த சூப்பர் ஹீரோவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ஒரு வீட்டில் துப்பாக்கியுடன் யாரோ சண்டையிடுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்த பொலிசார் ஆயுதங்களுடன் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, அங்கு உதவ வந்த சூப்பர் ஹீரோ ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

கனடாவின் Kelowna நகரில் பொலிசார் ஆயுதங்களின் பங்களிப்பு உள்ள ஒரு குற்றச்செயல் தொடர்பாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பேட் மேன் உடையணிந்த ஒரு நபர் கார் ஒன்றில் வந்து இறங்கினார்.

அவர் நேராக பரபரப்பான சூழலில் இயங்கிக் கொண்டிருந்த பொலிசாரிடம் சென்று உதவி ஏதாவது வேண்டுமா என்று கேட்டிருப்பார் போலும்.

கடுப்பான பொலிசார் தயவு செய்து இங்கிருந்து போய் விடுங்கள் என அவரை உடனடியாக அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

பின்னர் பேசிய பொலிசார், இம்மாதிரியான பதற்றமான சூழலில், பேட் மேனாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அவர்கள் சூழ்நிலையை விரும்பத்தகாத வகையில் திசை திருப்பக்கூடும், எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இது போன்ற செயல்கள் முட்டாள்தனமானதும், அவர்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமாகும் என்றனர்.

இதற்கிடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பொலிசார், சம்பவ இடத்தில் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்