ஹாங்காங்கில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களுக்கு கனடா அகதி அந்தஸ்து கொடுக்க தாமதிப்பதில் அமெரிக்க தலையீடு?

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்காவால் தேடப்படும் ஒருவருக்கு புகலிடம் கொடுத்ததற்காக பிரச்சினைக்குள்ளான அகதிகளில் ஒருவரான பிலிப்பைன்சைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அவரது மகளுக்கும், கனடா, அகதி அந்தஸ்து வழங்க முடிவு செய்துள்ளது.

ஆனால் அவருடன் கூட ஹாங்காங்கில் இருந்த இலங்கையைச் சேர்ந்த Supun Thilina Kellapatha, அவரது மனைவி Nadeeka Dilrukshi Nonis மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள், Ajith Pushpakumara என்னும் ஒருவர் ஆகியோர் 2016இலேயே விண்ணப்பித்தும் இன்னும் அவர்களுக்கு கனடாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை.

அகதி அந்தஸ்துக்கு அவர்கள் விண்ணப்பித்திருந்த அந்த நேரத்தில் (2016இல்), ஹாங்காங்கிலுள்ள கனேடிய தூதரகம் அவர்களது விண்ணப்பங்களை விரைவாக கையாள இருப்பதாக தெரிவித்திருந்தது.

ஆனால் 2017 கோடையில் அந்த நிலைமை அப்படியே மாறி, வரிசைப்படிதான் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்து விட்டது.

இது குறித்துக் கூறும் அந்த விண்ணப்பதாரர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான Tibbo, அமெரிக்கா மற்றும் Five Eyes என்னும் உளவுத்துறைகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலையீடுதான் இந்த தாமதத்திற்கு காரணம் என்கிறார்.

கனடாவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, Five Eyes உளவுத்துறைகளின் கூட்டமைப்பு கொடுக்கும் அழுத்தம் குறித்து கனடா அதிகாரிகள் மக்களிடம் சொல்வதை தவிர்க்க முயல்கிறார்கள் என்கிறார் அவர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அரசு தரப்பு, இப்படி ஒரு சம்பவம் குறித்து தாங்கள் அறிந்திருக்கவேயில்லை என்று கூறுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers