கனடாவில் சீன இளைஞர் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்!

Report Print Balamanuvelan in கனடா

கடந்த சனிக்கிழமை கனடாவின் டொரண்டோவுக்கு அருகில் Wanzhen Lu (22) என்ற சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் கடத்தப்பட்டார்.

மிகவும் வசதி படைத்தவரான Wanzhen, தனது தோழி ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த நால்வர் Wanzhenஐ ஷாக் கொடுக்கும் கருவி உட்பட ஆயுதங்களால் முரட்டுத்தனமாக தாக்கி கடத்திச் சென்றனர் . அந்த பெண்ணை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

CCTV கெமராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டு பொலிசார் Wanzhenஐ தேடி வந்தனர். சீன தூதரகத்துக்கும், Wanzhenஇன் குடும்பத்தாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் சந்தேகத்திற்குரிய 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததையடுத்து பொலிசார் அவரை விடுதலை செய்தனர்.

இந்நிலையில் வழக்கில் எதிர்பாராத திருப்பமாக Wanzhen கடத்தியவர்களிடமிருந்து தப்பியுள்ளார்.

நேற்றிரவு 9 மணியளவில் Gravenhurst பகுதியிலுள்ள வீடு ஒன்றின் கதவைத் தட்டி அவர் உதவி கோர, உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் பொலிசாரை அழைத்திருக்கிறார்.

விரைந்து சென்ற பொலிசார் Wanzhen காயமடைந்திருப்பதையறிந்து உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவருக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை என்றும் சிகிச்சைக்குப்பின் அவரை விசாரிக்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் அவரை கடத்திய நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், Wanzhen கிடைத்துவிட்டாலும் அவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers