சொந்த தந்தையால் கடத்தப்பட்ட 5 வயது கனேடிய சிறுமி: பொதுமக்கள் உதவி கோரும் பொலிஸ்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் சொந்த தந்தையால் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் பொலிசார் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் அமைந்துள்ள Armadale பாடசாலையில் இருந்து பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 5 வயதான ஜன்னா ஜஃப்ரி என்ற சிறுமி சொந்த தந்தையால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜன்னாவின் தந்தை சாலமன் ஜாஃப்ரி மீது வழக்குப் பதிந்துள்ள பொலிசார், கடத்தப்பட்ட சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

4 அடி உயரம் கொண்ட சிறுமி ஜன்னா ஜாஃப்ரி, பழுப்பு நிற கண்களுடன் கூடியவர் எனவும், இளம் பழுப்பு நிற தோள் அளவுக்கு தலைமுடியும் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜன்னாவின் தந்தை சாலமன்(25) 6 அடி உயரம் கொண்டவர் எனவும், தமது மகளின் பெயரான ஜன்னா என பச்சை குத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Coppard அவென்யூ அருகே பகல் 3 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் ரியா என்ற சிறுமியும் சொந்த தந்தையால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்