நியூசிலாந்து தீவிரவாதியின் 80 பக்க அறிக்கையை மீண்டும் வெளியிட்ட கனேடிய இணையதளம்: பொலிஸ் தீவிர விசாரணை

Report Print Balamanuvelan in கனடா

50 பேர் உயிரிழப்புக்கு காரணமாக விளங்கிய அவுஸ்திரேலிய தீவிரவாதியின் நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடுகளுக்கு முன் அவன் வெளியிட்ட 80 பக்க அறிக்கையை கனேடிய இணையதளம் ஒன்று மீண்டும் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய வலது சாரி இணையதளம் ஒன்று நியூஸிலாந்து தீவிரவாதியின் அறிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளதையடுத்து ஹாமில்ட்டன் பொலிசார் அது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

அந்த இனவெறி அறிக்கை Paul Fromm என்பவருடன் தொடர்புடைய இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ஹாமில்ட்டன் பொலிஸ் துறையின் இன வெறுப்பு பிரிவு, Fromm வெளியிட்டுள்ள தீவிரவாதியின் அறிக்கை குறித்து அறிந்துள்ளதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது கிரிமினல் குற்றமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.

குறிப்பிட்ட இனத்தாருக்கு எதிராக மனதார வெறுப்பைத் தூண்டுவது கனேடிய சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க சட்டம் வழிவகை செய்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்