அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் கனடா நாட்டு பெண் செய்த சாதனை!

Report Print Kabilan in கனடா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டு பெண், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பின்னிரவு நிகழ்ச்சிகள் என்பது அமெரிக்க தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பிரபல நடிகர்களையே அந்நிறுவனங்கள் இதுவரை தெரிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசி, தனது இரவு நேர நிகழ்ச்சிக்கு யூடியூப் சேனல் நடத்தும் கனடா நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் லில்லி சிங்கை தெரிவு செய்துள்ளது.

இவர் ‘சூப்பர் உமன்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் ஆவார். லில்லி சிங்கை அமெரிக்க தொலைக்காட்சி தனது பிரபலமான நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக நியமித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை இந்நிகழ்ச்சியை ஜோன் ரிவர்ஸ், சமந்தா பீ உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் தான் தொகுத்து வழங்கி வந்தனர். அரை நூற்றாண்டு காலமாக முக்கிய நடிகர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், முதல் முறையாக வெளிநாட்டு பெண் அதாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டு பெண் தொகுத்து வழங்க உள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து லில்லி சிங் கூறுகையில், ‘இந்த நிகழ்ச்சியும் எனது சூப்பர் உமன் சேனல் போன்றது தான். ஒரு இந்திய வம்சாவளி கனடா நாட்டு பெண்ணுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியானது’ என தெரிவித்துள்ளார்.

’எ லிட்டில் லேட் வித் லில்லி சிங்’ என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, நள்ளிரவு ஒரு மணியளவில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers