கனடிய பெண்ணை 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்த இந்தியர்: இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவை சேர்ந்த இளம் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஒடிசாவை சேர்ந்தவர் லீ நந்தா. பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது படிப்பை முடித்தார்.

பின்னர் கனடாவுக்கு சென்று அங்கு பணியில் சேர்ந்தார். அப்போது அங்குள்ள காபி ஷாப்பில் ஹெலினா என்ற பெண்ணை சந்தித்தார் நந்தா.

அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் மெதுவாக இருவரும் நெருங்கிய நண்பர்களாகி காதலர்களாக மாறினார்கள்.

தங்கள் காதல் குறித்து நந்தாவும், ஹெலினாவும் குடும்பத்தாரிடம் கூறிய நிலையில் அவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.

இதையடுத்து மூன்று வருடங்களாக காதல் பறவைகளாக இருந்த நந்தாவுக்கும், ஹெலினாவுக்கும் சமீபத்தில் ஒடிசாவில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் இருவீட்டாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இது குறித்து ஹெலினா கூறுகையில், குடும்பத்தார் அனைவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

தற்போது உள்ளூர் மொழியை என்ன பேச முடியவில்லை, ஆனால் என் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரிடம் அதை கற்று வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்