கனடா பிரதமரின் நாட்கள் எண்ணப்படுகின்றன: வெளிப்படையாக எச்சரிக்கும் அரசியல்வாதி

Report Print Balamanuvelan in கனடா

பர்னபி இடைத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங் வெற்றி பெற்றதுமே, அவர் பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்த்து போட்டியிடுவார் என்னும் பரபரப்பு கனடாவில் துவங்கி விட்டது.

பெரிய கட்டுமான நிறுவனம் தொடர்பான ஊழல் சர்ச்சை ஒன்றில்வேறு ட்ரூடோ அலுவலகம் சிக்கிக் கொண்டதையடுத்து மக்களிடையே ட்ரூடோவின் மதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுமார் 54 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளவரான கன்சர்வேட்டிவ் கட்சியின் Scot Davidsonவும் ட்ரூடோவுக்கு பெரிய தலைவலியாகியுள்ளார்.

தனது ஆதரவாளர்களிடையே பேசிய Scot Davidson, ஒரு பிரதமராக ட்ரூடோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

ஊழல் புகார் ஒரு புறம், ஜக்மீத் சிங் மற்றும் Scot Davidsonஇன் வெற்றி மறு புறம் என மக்களிடையே மதிப்பிழந்து வரும் ஜஸ்டின் ட்ரூடோவின் நாட்கள் உண்மையாகவே எண்ணப்படுகின்றனவா என்பதை பொதுத்தேர்தல்தான் முடிவு செய்யும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers