கனடா தீ விபத்தில் கொல்லப்பட்ட 7 சகோதரர்களுக்கும் கூட்டாக இறுதிச் சடங்கு: வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஹாலிஃபேக்ஸ் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மரணமடைந்த 7 சகோதரர்களுக்கும் கூட்டாக இறுதிச் சடங்கு நடத்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறித்த நிகழ்வானது பிப்ரவரி 23 ஆம் திகதி சனிக்கிழமை மார்ஜினல் சாலையில் உள்ள குனார்ட் மையத்தில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.

சிரியா அகதியான இப்ராஹிம் பர்ஹோ என்பவரது பிள்ளைகளான 14 வயது அகமது, 12 வயது ரோலா, 9 வயது மொஹமத், ஓலா (8), ஹலா (3), ராணா (2) மற்றும் நான்கு மாத குழந்தை அப்துல்லா ஆகிய எழுவரும் செவ்வாய் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இப்ராஹிம் பர்ஹோ தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார்.

இப்ராஹிமின் மனைவி Kawthar இந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை மீளவில்லை எனவும், கலக்கமடைந்த நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மரணமடைந்த சிறுவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்த ஏற்பட்டுகள் செய்யப்பட்டுள்ளது.

உம்மா மசூதி நிர்வாகிகளின் தகவலின்படி பகல் 1.30 மணியளவில் இறுதிச் சடங்கள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் சமுதாய உறுப்பினர்கள் சிலர் இரங்கள் செய்தி வாசிப்பார்கள் என துணை மேயர் டோனி மேன்சினி தெரிவித்துள்ளார்.

இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு பின்னர் அருகாமையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சிறுவர்கள் எழுவரும் நல்லடக்கம் செய்யப்படுவார்கள்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ள பொதுமக்களுக்கு பேருந்து வசதியும் செய்யப்படும் என துணை மேயர் டோனி மேன்சினி தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers