இனி மாமிசத்திற்காக கால்நடைகளை கொல்ல வேண்டாம்? கனடா ஆய்வில் சென்னை பெண் அறிவியலாளருக்கும் பங்கு!

Report Print Balamanuvelan in கனடா

டொராண்டோ ஆய்வாளர்கள் சிலர் இறைச்சிக்காக கால்நடைகளைக் கொல்வதற்கு மாற்றாக ஆய்வகத்திலேயே இறைச்சியை வளர்க்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்கா நிதியுதவி செய்யும் இந்த ஆய்வில் சென்னையைச் சேர்ந்த அறிவியலாளர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

ஆய்வகத்தில் திசு வளர்ப்பு முறையில் இறைச்சி, முட்டை அல்லது பால் போன்ற கால்நடை தயாரிப்புகளை கால்நடைகளைக் கொல்லாமலே தயாரிக்கலாம்.

Peter Stogios என்னும் அறிவியலாளருடன் சென்னையைச் சேர்ந்த Meena Venkatesan என்பவரும் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

பிரச்சினை என்னவென்றால் திசுக்களை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் விலை உயர்ந்தவையாகும்.

எனவே அவற்றிற்கு மாற்றாக விலை குறைந்த உப பொருட்களை பறவைகள் மீன் மற்றும் மாட்டிறைச்சியிலிருந்து தயாரிக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அப்படி அவர்கள் அந்த உப பொருட்களை தயாரித்துவிட்டால் அவை பல ஆய்வுகளுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.

இந்த ஆய்வுக்காக வாஷிங்டனிலுள்ள The Good Food Institute என்னும் நிறுவனம் 250,000 அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த ஆய்வு வெற்றி பெற்றால் அது மாமிசம் உண்பவர்களுக்கு ஒரு நற்செய்தி என்பதோடு, கால்நடைகளை கொல்லாமலே இறைச்சி கிடைக்கும் என்பதால் அது விலங்குகள் நல அமைப்பினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers