கனடாவில் 7 குழந்தைகளை தீ விபத்தில் பறிகொடுத்த தந்தையின் தற்போதைய நிலை: வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஹாலிஃபேக்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகளை பறிகொடுத்த தந்தையின் உடல் நலம் தேறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் ஹாலிஃபேக்ஸ் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த 19 ஆம் திகதி திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த குடியிருப்பில் சிரியாவை சேர்ந்த இப்ராஹிம் பர்ஹோ என்பவர் தமது மனைவி மற்றும் 7 குழந்தைகளுடன் குடியிருந்து வந்துள்ளார்.

தீ விபத்து சம்பவத்தை உணர்ந்த இப்ராஹிமின் மனைவி தமது கணவருடன் இணைத்து தங்களது பிள்ளைகளை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்களால் முடியாமல் போயுள்ளது. இதனிடையே தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடியுள்ளனர்.

இதில் 5 குழந்தைகள் உடல் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. எஞ்சிய இரு பிள்ளைகள் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சொந்த பிள்ளைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்ற போராடிய இப்ராஹிம் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது நிலை தேறியுள்ளதாகவும், ஆனாலும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளதாக அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தீ விபத்தில் மரணமடைந்த சிறுவர்களுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ கலந்து கொண்டுள்ளார்.

இதனிடையே சிரியாவில் உள்ள இப்ராஹிம் குடும்பத்தாரை கனடாவுக்கு அழைத்துவருவதில் சிக்கல் இருப்பதாகவும், உடனடியாக அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers