கனேடிய சிறுமியைக் கொன்ற தந்தை மருத்துவமனையில் உயிரிழந்தார்! அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in கனடா

தனது மகளின் பிறந்த நாள் அன்று அவளைக் கொலை செய்த கனேடிய நபர், மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கனடா சிறுமி ரியா ராஜ் குமார் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது தந்தை வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், அவளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக அவளது தாய்க்கு தகவல் அனுப்பினார் ரியாவின் தந்தை ரூபேஷ் ராஜ்குமார்.

ரியாவின் தாய் உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்தும் ரியாவைக் காப்பாற்ற முடியவில்லை.

அவளைக் கொலை செய்து விட்டு காரில் தப்பியோடிய ரூபேஷை, பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் துரத்திச் சென்று கைது செய்தனர் பொலிசார். கைது செய்யப்படும்போது ரூபேஷின் உடலில் காயம் இருந்ததைக் கண்ட பொலிசார், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரது நிலைமை மோசமாக இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடியாத சூழல் பொலிசாருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை ரூபேஷ் ராஜ்குமார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ரியா எதற்காக கொலை செய்யப்பட்டார், பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வந்த ரியாவை ரூபேஷ் ஏன் கொலை செய்தார், அவர் உடலில் எப்படி காயங்கள் ஏற்பட்டன, அவர் ஏன் ரியாவின் தாய்க்கு கொலை மற்றும் தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பது போன்ற எந்த கேள்விக்கும் பதில் கிடைக்காத நிலையில், ரூபேஷின் மரணம் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்