கனடா நகரம் ஒன்றிற்கு வியட்நாம் உணவால் ஏற்பட்டுள்ள பிரச்சினை!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவிலுள்ள சிறு நகரம் ஒன்றில் வியட்நாமியர்களுக்கு பிடித்த உணவான மீன் சாஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது.

Newfoundlandஇலுள்ள St. Mary's என்னும் அந்த சிறு நகரத்தில் அமைந்துள்ள அந்த தொழிற்சாலையில், ஒவ்வொன்றும் 3,300 காலன்கள் கொள்ளளவு உடைய 150 டாங்குகள் நிறைய மீன் சாஸ் வைக்கப்பட்டிருந்தது.

2001ஆம் ஆண்டு அந்த தொழிற்சாலையை ஆய்வு செய்ய வந்திருந்த உணவு ஆய்வாளர்கள் அங்கு சுகாதாரமற்ற முறையில் சாஸ் தயாரிக்கப்படுவதை அறிந்து அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

பின்னர் சில ஆண்டுகளுக்கு பிறகு தடை நீக்கப்பட்டாலும், மீண்டும் அங்கு சாஸ் தயாரிக்கும் பணி தொடரவில்லை, ஆனால் அந்த சாஸ் அகற்றப்படாமல் அங்கேயே இருந்தது.

அதிலிருந்து வீசும் நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள் அந்த நகர மக்கள். 2016ஆம் ஆண்டு அந்த தொழிற்சாலையை சுத்தம் செய்யும் முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் பின்னர் அவை நிறுத்தப்பட்டன.

அந்த டாங்குகளிலிருந்து லீக்காகும் அந்த மீன் சாஸ், தரையில் கொட்டி, கெட்டியாகி அப்படியே 4 இன்ச் அளவிற்கு உறைந்து போய்க் கிடக்கிறது. அதை திரவமாக்கினால்தான் அங்கிருந்து அகற்ற முடியும்.

அதற்கு சுமார் 700,000 டொலர்கள் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த சாஸை சுத்தம் செய்வதற்காக ஒரு நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்து வந்ததும், அவர் அந்த இடத்தை பார்வையிட்டு விட்டு, இங்கு ஏராளமாக குப்பை இருக்கிறது, ஆனால் ஒரு எலி கூட இல்லை என்றார்.

அவர் கூறினார், 'எங்கு நச்சுப்பொருட்கள் இருக்கிறது என்று தெரியுமோ, அங்கு எலிகள் வருவதில்லை’.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers