அவள் என்னைவிட்டு எங்கும் செல்ல கூடாது: நடிகை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த கணவன்

Report Print Vijay Amburore in கனடா

கனடாவில் நகைசுவை நடிகையை கொலை செய்துவிட்டு காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய கணவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் அல்பெர்டா பகுதியை சேர்ந்தவர் நகைசுவை நடிகை ஷானன் பர்கஸ் (24). இவரை மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் யோசுவா பர்கஸ் (31), கடந்த 2014ம் ஆண்டு கொலை செய்துள்ளார்.

நீண்ட நேரம் ஷானன் பேசிக்கொண்டிருந்ததால், கையை வைத்து அவருடைய வாயை அடைந்துள்ளார்.

ஆனால் அவள் கடித்துவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்ததால், இரண்டு கைகளையும் வைத்து கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளார்.

இதில் பரிதாபமாக உயிரிழந்த அவருடைய சடலத்தை சில நாட்கள் வீட்டிலேயே வைத்துவிட்டு, பின்னர் தோட்டப்பகுதியில் புதைத்துள்ளார்.

மேலும், மனைவியை காணவில்லை என பொலிஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். 7 மாதங்களாக பொலிஸ் மற்றும் ஷானன் உறவினர்கள் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

ஜூலை 2015ம் ஆண்டு வீட்டில் சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் பொலிஸார், யோசுவா வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் வீட்டிற்குள் பொலிசாரை அனுமதிக்க மறுத்த யோசுவா, திடீரென கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றான்.

உடனடியாக அவனை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவள் என்னை விட்டு எங்கும் சென்றுவிட கூடாது என்பதற்காகவே தோட்டத்தில் புதைத்தேன் என ஒப்புக்கொண்டான்.

இந்த நிலையில் மனைவியை கொலை செய்து, அதனை மறைக்க முயன்ற யோசுவாவிற்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers