லாட்டரியில் லட்சக்கணக்கில் விழுந்த பணம்: பரிசை பெற சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லாட்டரி சீட்டில் $50,000 பரிசை வென்ற பெண் பரிசு பணத்தை வாங்க லாட்டரி அலுவலகத்துக்கு சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

St. John's நகரை சேர்ந்த நபர் ஒருவர் தனது பர்ஸை காணவில்லை என பொலிசில் புகார் கொடுத்தார்.

பர்ஸ் உள்ளே கிரெடிட் கார்டை அவர் வைத்திருந்த நிலையில் அதை வைத்து பொலிசார் விசாரணையை தொடங்கினர்.

அதன்படி சில கடைகளில் அந்த கார்டை வைத்து பொருட்கள் வாங்கியது தெரியவந்தது.

இதோடு லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் நிலையத்தில் கார்டை வைத்து லாட்டரி சீட்டு வாங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து குறித்த லாட்டரி நிலையத்துக்கு பொலிசார் வந்தனர். அப்போது தான் 33 வயதான பெண் அங்கு லாட்டரி சீட்டை வாங்கியது தெரியவந்தது.

அந்த சீட்டுக்கு $50,000 பரிசு விழுந்த நிலையில் பரிசை வாங்க அப்பெண் அங்கு வந்தார். அப்போது அங்கிருந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர் கிரெடிட் கார்டை திருடி அதன் மூலம் லாட்டரி டிக்கெட் உள்ளிட்ட பொருட்களை வாங்கியது உறுதியானது.

இதனிடையில் பெண்ணுக்கு லாட்டரியில் விழுந்த $50,000 பணம் குறித்த லாட்டரி நிறுவனத்தில் அடுத்து நடக்கும் ஜாக்பாட் போட்டியில் சேர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்