அகதிகள் கோரிக்கை தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் 64,000த்துக்கும் அதிகமான அகதிகளின் விண்ணப்பங்கள், இந்த வாரம் முதல், அகதி கோரிக்கைகளை விரைந்து பரிசீலிக்கும் அதி வேக திட்டத்திற்கு தகுதியுடையவையாக மாறும் வாய்ப்புள்ளது.

கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் போர்டு (IRB)வெளியிட்டுள்ள இந்த புதிய செயல்முறையின்படி (new paper-based process), கோரிக்கை விடுக்கும் நபர் அகதிகள் நீதிபதி ஒருவர் முன்பாக ஆஜராக வேண்டியதில்லை.

அதுமட்டுமின்றி இந்த குறுகிய விசாரணை செயல்முறை, இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே முடிந்து விடும்.

இந்த புதிய செயல்முறையை இன்னும் எளிமையாக்குவதற்காக IRB, இந்த திட்டத்திற்கு பொருந்தும் நாடுகள் மற்றும் கோரிக்கை வகைகள் ஆகியவற்றின் பட்டியல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

அந்த பட்டியலில், ஈரானிலிருந்து வரும் பாலின (Gender) மற்றும் வயது அடிப்படையிலான கோரிக்கைகள், லிபியாவிலிருந்து வரும் பணத்திற்காக கடத்தப்பட்டவர்கள், பாகிஸ்தானிலிருந்து வரும் மத அடிப்படையிலான கோரிக்கைகள், சூடானிலிருந்து வரும் அரசியல் மற்றும் ராணுவ எதிர்ப்பாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

பெண்கள் என்னும் காரணத்தினாலேயே அபாயத்திலிருக்கும் சவுதியிலிருந்து வரும் எந்த பெண்ணும், இந்த புதிய திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

அதேபோல் வெனிசுலா, துருக்கி, எகிப்து, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் மற்றும்

ஏமனிலிருந்து வரும் சில குறிப்பிட்ட பிரிவு பெண்களுக்கும் இதே சலுகை உண்டு.

IRBயின் கருத்துப்படி 80 சதவிகிதம் மற்றும் அதற்கு அதிகமான ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியுடைய நாடுகள் அல்லது கோரிக்கை வகைகள் இந்த புதிய paper-based அல்லது file-review திட்டத்திற்கு தகுதியானவையாகும்.

அதேபோல் நம்பத்தகுந்த ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட அடையாளங்களைக் கொண்ட கோரிக்கைகள் அல்லது நாடுகளும், சிக்கலான, சட்ட மற்றும் உண்மைகளை நிரூபிப்பதில் பிரச்சினை போன்றவற்றில் ஈடுபடாதவர்களின் கோரிக்கைகளையும் இந்த திட்டத்தில் பரிசீலிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

அதே நேரத்தில் 20 சதவிகிதம் மற்றும் அதற்கு குறைவான ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியுடைய நபர்கள், IRBயால் நிராகரிக்கப்படுவார்கள் மற்றும் அவர்கள் நேரடியாக விசாரிக்கப்படும் short-hearing process என்னும் திட்டத்தின் கீழ் வருவார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்