பயிற்சியாளர்கள் மீது விளையாட்டு வீராங்கனைகள் புகார்: மீண்டும் ஒரு பாலியல் துஷ்பிரயோக வழக்கு

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு பயிற்சியாளர் நூற்றுக்கணக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு உலகையே உலுக்கிய நிலையில், மீண்டும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளர்கள் பாலியல் துஷ்பிரயோக புகாருக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இம்முறை அது நடந்திருப்பது கனடாவில், அதுவும் ஒரு கணவனும் மனைவியும் புகாரில் சிக்கியிருக்கிறார்கள்.

கனடா ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவின் பயிற்சியாளரான Elizabeth Brubaker தனது பதவியிலிருந்து நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் நடத்தை குறித்து ஏராளமான புகார்கள் எழுத்து வடிவில் தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பின் நிர்வாகிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன.

அவர் செய்த தவறுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. தேசிய பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவின் இயக்குநராக இருக்கும் அவரது கணவரான Dave Brubaker மீதும் பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சை செய்வதாகக் கூறி ஒரு வீராங்கனையின் மார்பகங்களையும் பெண்ணுறுப்பையும் தவறாக தொட்டதாகவும், அந்த பெண்ணை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டதாகவும், தினமும் அவளது உதடுகளில் முத்தமிட்டதாகவும் வரிசையாக Daveமீது புகாரளித்துள்ளார் அந்த பெண்.

Dave குற்றவாளியா இல்லையா என்ற தீர்ப்பை நீதிபதி Deborah Austin பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி வழங்க இருக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்