பூர்வக்குடியின பெண்ணை ஆறு முறை துஷ்பிரயோகம் செய்து கொன்ற நபர்: சிக்கவைத்த தாதா

Report Print Balamanuvelan in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பூர்வக்குடியினத்தவரான ஒரு இளம்பெண்ணை ஆறு முறை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த நபரை நாடகமாடி சிக்க வைத்தார் ஒரு தாதா.

Monica Jack (12) என்னும் இளம்பெண் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது, Garry Handlen (71) என்னும் நபர் அவளைக் கடத்திக் கொண்டுபோய் தனது கேரவனில் வைத்து வன்புணர்வு செய்தான்.

ஆறு முறை வரை Monicaவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த Garry, பின்னர் தனது கேரவனை மலைக்கு ஓட்டிக் கொண்டு போய், அவளை கொலை செய்தான். இந்த சம்பவம் நடைபெற்றது இன்று நேற்றல்ல, 1978ஆம் ஆண்டு.

பல ஆண்டுகளுக்குப் பின் பொலிசாரின் சந்தேக வளையத்திற்குள் Garry சிக்கினான்.

ஆனால் அவன்தான் குற்றம் செய்தவன் என்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் Garry ஒரு நிழல் உலக தாதாவை சந்திக்க நேர்ந்தது. அந்த தாதா நிழல் உலக வேலைகளை செய்வதற்கு Garryக்கு ஏராளமான பணம் கொடுக்க முன்வந்தார்.

12,000 டொலர்கள் வரை Garryக்கு கொடுக்கப்பட்டது. பின்னர் ஒரு நாள் அந்த தாதா, Garryயிடம், Monicaவின் கொலை வழக்கில் Garry சிக்கியிருப்பதாகவும், பொலிசாரிடம் DNA ஆதாரங்கள் உள்ளதாகவும், ஆனால் போதுமான விவரங்களைக் கூறினால், கொலைப்பழியை வேறு யார் மீதாவது திருப்பி விடலாம் என்றும் கூறியிருக்கிறார்.

அந்த தாதாவை நம்பிய Garry, தான் Monicaவை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையும், பின்னர் தனது கேரவனை மலைக்கு ஓட்டிக் கொண்டு போய், அவளை கொலை செய்ததையும் அங்கேயே அவளது உடலை போட்டு விட்டு வந்ததையும் விவரமாக தெரிவித்திருக்கிறான்.

அவனுக்கு தெரியாமல் அவன் பேசிய அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் அவன் அந்த பெண்ணை கொன்று போட்ட இடத்தைக் காட்டுமாறு கேட்க, அந்த இடத்தையும் அடையாளம் காட்டியிருக்கிறான் Garry.

ஒன்பது மாதங்கள் நடத்திய நாடகத்திற்குப்பின் தாதாவாக வேடமிட்டிருந்தவர் உட்பட்ட ரகசிய பொலிசார் Garryயை கைது செய்துள்ளனர். அவன் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து Monicaவின் மண்டையோடும், சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.

நேற்று Garryமீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அறிந்த Monicaவின் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

இந்த வழக்கில் Garryக்கு கொலைக்காக மட்டுமே ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்பதோடு, அவன் 25 ஆண்டுகள் வரை ஜாமீனிலும் வர இயலாது. ஜனவரி 28ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers