ஏலியன்களிடமிருந்து பூமிக்கு வந்த சிக்னல்! கனடா ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்

Report Print Kabilan in கனடா

ஏலியன்களிடம் இருந்து பூமிக்கு ரேடியோ சிக்னல் ஒன்று வந்திருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியைத் தவிர வேறு கிரகங்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் வசிக்கிறார்களா என்ற கேள்வி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்களிடம் இருந்து சிக்னல் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த சிக்னல் எங்கிருந்து வந்துள்ளது என்பதை கணிக்க முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த ரேடியோ சிக்னல் சுமார் 3 வாரத்திற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 13 ஒளிக்கற்றைகள் புதிய ரேடியோ தொலைநோக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது. அவை எங்கிருந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஏலியன்களிடம் இருந்து சிக்னல் வருவது இது முதல் முறை அல்ல என்றும், இதற்கு முன்னரும் இம்மாதிரியான சிக்னல்கள் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் 2007ஆம் ஆண்டும் சிக்னல்கள் கிடைத்துள்ளன. அப்போது வெறும் அறுபது சிக்னல்களே வந்தன. இப்போது சிக்னல்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகின்றது.

தற்போது கிடைத்துள்ள சிக்னல்களில் ஏழு சிக்னல்கள் அதிக அலைவரிசை கொண்டவை. இவை 400 மெகா ஹெர்ட்ஸ்க்கும் அதிகமாக இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த ஆராய்ச்சிகள், சில முடிவுகளுக்கு விஞ்ஞானிகளைக் கொண்டு வந்துள்ளன.

சூப்பர் நோவா என்னும் பெருஞ்சூரியனிலிருந்து வெளியான மிச்சங்களுடைய சிக்னல்களாக கூட இவை இருக்கலாம் என்றும், அல்லது மிகப்பெரிய கருந்துளையில் உருவான வெடிப்பு நிகழ்வு ஏதாவது ஒன்றில் கடுமையான கதிர்வீச்சுகளாக வெளியாகியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers