அழுத குழந்தையை சிரிக்க வைக்க விமான நிலைய ஊழியர் செய்த செயல்: வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் விமான நிலையத்தில், விமானம் புறப்படுவதை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் குழந்தை ஒன்று அழுவதை விமானத்தின் ஜன்னல் வழியாக பார்த்தார்.

உடனடியாக Jahmaul Allen என்னும் அந்த ஊழியர், அந்த குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அங்கேயே நடனமாட ஆரம்பித்தார்.

அவர் நடனமாடுவதைக் கண்டதும் குழந்தை சிரிக்கத் தொடங்க, குழந்தையின் தாய் கைகளைத் தட்டி அவரை உற்சாகப்படுத்தி, தொடர்ந்து நடனமாடுமாறு சைகையில் அவரை கேட்டுக்கொள்ள, Allen தொடர்ந்து நடனமாடியபடியே விமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தார்.

அவர் நடனமாடுவதை வீடியோ எடுத்த ஒரு பெண், அதை சமூக ஊடகங்களில் பதிவேற்ற, உடனடியாக அந்த வீடியோ வைரலானது.

தனது நடனத்திற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு அதிர்ச்சியடைந்து போனதாக தெரிவிக்கிறார் Allen.

Allen நடனத்தில் சிறந்தவர் என்பது பலருக்கு தெரியும் என்றாலும், இந்த வீடியோ ஒரே நாளில் அவருக்கு பல மடங்கு ரசிகர்களை பெற்றுத் தந்து விட்டது.

அவ்வப்போது ஜாலி மூடில் இருக்கும்போதும், குழந்தைகளை சிரிக்க வைப்பதற்கு நடனமாடினாலும், தனது பணியும், பாதுகாப்பும் முக்கியம் என்கிறார் Allen.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers