கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன்: இரட்டைச் சகோதரர்களுக்கு தொடர்பு

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் தெற்கு ஒன்ராரியோ பகுதியில் உள்ள Mississauga நகரில் சிறுவன் ஒருவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கொலை வழக்கு தொடர்பில் ஏற்கெனவே ஒரு சகோதரர் கைதான நிலையில் சனிக்கிழமை மாலை எஞ்சிய சகோதரரும் பொலிசில் சரணடைந்துள்ளார்.

வெள்ளியன்று காலை Mississauga பூங்கா ஒன்றில் மிக கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் மார்ட்டின் என்ற 14 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் 20 வயதான நிக்கோலஸ் மஹாபிர் என்பவரை வெள்ளியன்று மாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவரது சகோதரரான மார்க் மஹாபிர்(20) தலைமறைவான நிலையில், சனிக்கிழமை மாலை அவரும் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

இருவரையும் ஞாயிறன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

நிக்கோலஸ் தமது வாதத்தை அவரே நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளதால் அவர் தொடர்பிலான வாதம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முடிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கொல்லப்பட்ட சிறுவனுடன் ஏற்கெனவே தொடர்பில் இருந்தவர்களால் என்ற கேள்விக்கு பொலிசார் பதிலளிக்க மறுத்துள்ளனர்.

வியாழனன்று இரவு குடியிருப்பில் இருந்து வெளியேறிய சிறுவன் மார்ட்டின், அதன் பின்னர் வீடு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவரது சடலம் அடுத்த நாள் காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மாயமானது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் தரப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers