பிரித்தானிய விமானத்தில் கனடா பெண்ணுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்

Report Print Balamanuvelan in கனடா

பிரித்தானிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விமானத்தில் பயணித்த கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு முன் இருந்த தொலைக்காட்சியின் மீது ஊர்ந்த மூட்டைப்பூச்சிகளைக் கண்டு அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்தார்.

Heather Szilagyi பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் லண்டனுக்கு பயணித்தபோது, அந்த ஒன்பது மணி நேர பயணம் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் சித்திரவதையாக அமைந்தது.

தனது எட்டு வயது மகள் மற்றும் வருங்கால கணவருடன் பயணித்த அவர், விமான இருக்கைகளிலிருந்து ஏராளமான மூட்டைப்பூச்சிகள் வெளிவருவதைக் கண்டார்.

விமான பணிப்பெண்களிடம் வேறு இருக்கை கேட்டால், விமானத்தில் அன்று இருக்கைகளே வெறுமையாக இல்லை.

நாங்கள் விமானத்திருந்து இறங்கி ஹோட்டல் அறைக்கு சென்றவுடன் செய்த முதல் காரியம், வாஷிங் மெஷினில் சுடு தண்ணீரில் துணிகளை எல்லாம் துவைத்ததுதான் என்கிறார் Heather.

இந்த அனுபவம் அவருக்கு மட்டுமல்ல, Tim Footman என்பவர் ஹீத்ரூவிலிருந்து வான்கூவர் பயணிக்கும்போது உடல் முழுவதும் மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்ததோடு கடித்தும் வைத்த காயங்களைக் காட்டுகிறார்.

இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பூச்சியியல் பேராசிரியரான Murray Isman, மக்கள் விமானத்தில் பயணம் செய்வது அதிகரித்து விட்டது, இனி இப்படித்தான் இருக்கும், மூட்டைப்பூச்சிகள் விமானங்களில் காணப்படுவது சாதாரணமான ஒன்றாகிவிடும் என்கிறார்.

தட்பவெப்பநிலை மாற்றங்கள் முதல் பூச்சி மருந்துகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரை மூட்டைப்பூச்சிகள் பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளதால் இனி இப்படித்தன் இருக்கும் என்கிறார் அவர்.

இதற்கிடையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், Heatherக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்புக் கோர இருப்பதாகவும், தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்