பலி கொடுப்பதற்காக விரல்களை வெட்டிக் கொண்ட மனிதர்கள்: கனடா ஆய்வாளர் தகவல்

Report Print Balamanuvelan in கனடா

வரலாறுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் மதம் தொடர்பான சடங்கு ஒன்றிற்காக தங்களது விரல்களை வெட்டிக் கொண்டிருக்கலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள குகை ஓவியங்களில் புராதன கால சாயங்களில் தோய்த்து சுவர்களில் பதிக்கபட்டுள்ள கை அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த ஓவியங்களில் பலவற்றில், சில விரல்களைக் காண இயலாததால், அவை பலி கொடுக்கப்படுவதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்றியலாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த காலங்களில், உலகின் பல பகுதிகளில் பலி கொடுப்பதற்காக விரலை வெட்டிக் கொள்ளும் ஒரு வழக்கம் இருப்பதை நாம் அறிவோம் என்று கூறும் கனடாவின் Simon Fraser பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளரான Mark Collard, கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள், சில குறிப்பிட்ட கால கட்டத்தைச் சேர்ந்த மக்கள், மதச் சடங்கிற்காக தங்கள் விரலை வெட்டிக் கொள்வதாக தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதிலும், குகை ஓவியங்களில், ஒரு விரல் இல்லாத கை அடையாளங்கள் சர்வ சாதாரணம். ஆப்பிரிக்கா, யூரேசியா, ஓசீனியா மற்றும் அமெரிக்கா உட்பட பல இடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், விரலை வெட்டிக் கொள்ளும் வழக்கம் 121 சமூகங்களில் காணப்பட்டதாக தெரிவிக்கின்றன.

உதாரணத்திற்கு, பிரான்சின் Grotte de Gargasஇல் 50 மனிதர்கள் வாழ்ந்த ஒரு இடத்தில் அவர்களது 231 கை அடையாளங்கள் கிடைத்தன.

அவற்றில் கிட்டத்தட்ட பாதி கை அடையாளங்களில் (114) ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விரல்கள் இல்லை. ஆய்வாளர்களைப் பொருத்தவரையில், இதற்கு காரணம் ஒரு மத சடங்கிற்காக கொடுக்கப்பட்ட பலியாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது.

அதே நேரத்தில் சில அறிவியலாளர்கள் பனியால் பாதிக்கப்பட்டு சிலரின் விரல்கள் அழுகிப்போயிருக்கலாம் (frostbite) என்றும் கருதுகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers