டாக்சிக்கு காத்திருந்த இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஓட்டுநர் கைது

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் டாக்சிக்கு காத்திருக்கும் இளம்பெண்களிடம் வலியச் சென்று, பிரபல வாடகைக் கார் நிறுவனத்தின் ஓட்டுனர் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு, பின்னர் அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியாக நான்கு பாலியல் புகார்கள் வந்ததையடுத்து உபேர் நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடந்த சம்பவங்கள் அனைத்துமே அதிகாலை வேளையில்தான் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ள பொலிசார், ஒரு குறிப்பிட்ட நபர் தனியாக நிற்கும் இளம்பெண்களை அணுகி அவர்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு விடுவதாக கூறியுள்ளர்.

மேலும் இரண்டு சம்பவங்களில் பெண்கள் உபேர் கால் டாக்சிக்கு காத்திருக்கும்போது இந்த நபர் வந்து அழைக்கவே, அவர்தான் தங்கள் ஓட்டுநர் என்று தவறாக நினைத்து காரில் ஏறியிருக்கிறார்கள்.

இரண்டு பெண்களிடம் இலவசமாக அழைத்துச் செல்வதாக அந்த நபர் கூறியதையடுத்து அந்த பெண்கள் அவரது காரில் ஏறியிருக்கிறார்கள்.

தாங்கள் இறங்க வேண்டிய இடத்தை தாண்டிச் சென்ற அந்த நபர், பின்னர் அந்த இளம்பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.

CCTV கெமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்த நபரை பொலிசார் தேடி வந்தனர்.

தற்போது இச்சம்பவங்கள் தொடர்பாக Vaughan பகுதியைச் சேர்ந்த Senol Komec (38) என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.வரும் செவ்வாயன்று அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்