வீட்டில் தனியாக இருந்த தாய் மற்றும் 17 வயது மகளுக்கு நேர்ந்த பயங்கரம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் தாய் மற்றும் மகளை மர்ம நபர் கொடூரமாக தாக்கியதில் இருவரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகிறார்கள்.

டொரண்டோவின் Scarborough-ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் மர்ம நபர் நுழைந்துள்ளார்.

பின்னர் உள்ளிருந்த 30-களில் உள்ள தாய் மற்றும் 17 வயது மகளை கொடூரமாக தாக்கியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மற்றும் மருத்துவ குழு இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு 17 வயது சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் தாய்க்கு தலையில் ஏற்பட்டுள்ள படுகாயத்துக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிக்கு 35லிருந்து 40 வயது வரை இருக்கும் என தெரியவந்துள்ள நிலையில் அவரின் உயரம் 5.9 இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

வெள்ளை நிற உடையில் இருந்த குற்றவாளிக்கு, தாக்குதலில் காயமடைந்துள்ள இருவரை ஏற்கனவே தெரியுமா என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்