குழந்தையை நினைத்து தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணி: வெளிநாட்டில் இருந்து உதவிகரம் நீட்டிய பெண்.. நெகிழ்ச்சி பின்னணி

Report Print Raju Raju in கனடா

தமிழகத்தில் குழந்தை காணாமல் போனதால் கர்ப்பிணியாக இருக்கும் தாய் தவித்து வரும் நிலையில் கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அவருக்கு பண உதவி செய்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் மகள் ஹரிணி (2).

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பாசி மணிகள் விற்கப் போன அவர்கள் அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கினர். நடுராத்திரியில ஹரிணி காணாமல் போக, பதறிப்போன தம்பதி, பொலிசில் புகார் கொடுத்தனர்.

ஹரிணி கிடைக்கிற வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம் என்று அங்கேயே தங்கி இருக்கிறார்கள். காளியம்மாள் கர்ப்பிணியாக உள்ளதால், அவர் உணவு சாப்பிடாமல் அல்லாடி வருவது வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்று வெங்கடேசன் பதறி வருகிறார்.

இந்த விடயத்தை பத்திரிக்கை மூலம் அறிந்த கனடாவில் வசிக்கும் நிர்மலா என்ற பெண் ஹரிணி மருத்துவப் பரிசோதனை செய்ய வசதியாக ரூ.10,000 பணத்தை அனுப்பியுள்ளார்.

காளியம்மாள் தீபாவளி அன்று, நாள் முழுக்க சாப்பிடாமல் அடம் பிடித்திருக்கிறார். இதனால் அவரது உடல்நிலை மோசமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வைக்கும் முயற்சியில் இணைந்த கைகள் அமைப்பு இறங்கி இருக்கிறது.

இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சலீம், ஹரிணி கிடைக்கலையேங்கிற விரக்தியில காளியம்மாள் சாப்பிடாமல் உடம்பை வருத்தி வருகிறார். பொலிசார் முன்புபோல் வேகமாகச் செயல்படவில்லை.

ஹரிணியைக் கண்டுபிடிக்க சமூக அமைப்புகள் மட்டுமே முயற்சிகள் செய்துட்டு இருக்கோம்.

இந்நிலையில் தான் கனடாவைச் சேர்ந்த நிர்மலா என்ற பெண் ஹரிணியை நினைத்து காளியம்மாள் சாப்பிடாமல் இருப்பது அவங்க வயித்துல வளர்ற இன்னொரு பாப்பாவையும் பாதிக்கும்.

அதனால், அவங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிங்க. தைரியம் கொடுத்து நல்லா சாப்பிட வையுங்கள் என உருக்கமாக பேசியதோடு, பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் அனுப்பி நெகிழ வைத்தார் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்