கனடா அலுவலகம் ஒன்றில் மர்ம பார்சல் கண்டுபிடிப்பு: மக்கள் வெளியேற்றம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் அலுவலகம் ஒன்றில் மர்ம பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உடனடியாக அங்கிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கனடாவின் Edmontonக்கும் Carlton தெருக்களுக்கும் இடையில் Broadwayயில் அமைந்துள்ள அலுவலக கட்டிடம் ஒன்றில் மர்ம பார்சல் ஒன்று கிடப்பதாக உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணியளவில் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அந்த கட்டிடத்திற்கு விரைந்தனர்.

உடனடியாக கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர், Broadwayயின் ஒரு பகுதி உட்பட சுற்றியுள்ள சில சாலைகள் மூடப்பட்டன.

இரவு சுமார் 9 மணியளவில் அந்த பார்சலால் ஆபத்து எதுவும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டதோடு தொடர்ந்து அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

அந்த மர்ம பார்சல் குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்