கனடா செல்லும் சீன மக்களுக்கு கடும் எச்சரிக்கை

Report Print Kavitha in கனடா

கனடாவில் சமீபத்தில் தான் கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செல்லும் சீன மக்களை அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த தகவலை ரொறன்ரோவில் உள்ள சீனத் தூதரகம் தனது இணையத்தளம் ஊடாக தெரிவித்திருந்தது.

கனடாவில் கஞ்சா பயன்பாடும் விற்பனையும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், தத்தமது உடல் உள ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், இவ்வாறு கஞ்சா புகைப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

குறிப்பாக ஜப்பான், தென் கொரிய ஆகிய நாடுகள், சீனாவின் இவ்வாறான எச்சரிக்கைக்கும் அப்பால் சென்று, கனடாவில் சென்று கஞ்சா பயன்படுத்தியிருந்தாலும், தத்தமது நாடுகளில் அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம் என்று எச்சரித்துள்ளன.

மேலும் தென் கொரிய தூதரகம் தனது அறிக்கை ஒன்றில் “எந்த நாட்டில் கஞ்சா சட்டபூர்வமாக இருந்தாலும், தமது நாட்டு குடிமக்கள் கஞ்சாவை புகைப்பது, கொள்வனவு செய்வது, வைத்திருப்பது, பிறருக்கு கொடுப்பது என்பன தண்டனைக்குரிய குற்றம்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்