25 கைத்துப்பாக்கிகளுடன் கனடா எல்லையில் 50 வயது பெண் கைது

Report Print Balamanuvelan in கனடா

அமெரிக்காவிலிருந்து எல்லையைத்தாண்டி கனடாவுக்குள் நுழைந்த ஒரு வாகனத்தை சோதனையிட்ட பொலிசார் அதிலிருந்து 25 கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததோடு அந்த வாகனத்தை ஓட்டி வந்த 50 வயதுள்ள பெண் ஒருவரையும் கைது செய்தனர்.

ஒண்டாரியோவின் Fort Erie நகரில் அமைந்துள்ள எல்லை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் ஒரு SUV ரக வாகனம் ஒன்று நுழைந்தது.

அதை சோதனையிட்ட பொலிசார் அதில் ஒரு காஸ் டாங்க் இருப்பதைக் கண்டனர்.

சந்தேகத்தின்பேரில் அதை வெட்டிப் பார்த்தபோது, அதினுள் 25 கைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணைக் கைது செய்த பொலிசார், காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

அவர் மீது ஆயுதம் கடத்தியது உட்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டில் மட்டும் டொராண்டோ பொலிசார் 726 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அவற்றில் 328 துப்பாக்கிகள் மட்டுமே எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

180 துப்பாக்கிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை, 148 கனடாவில் தயாரிக்கப்பட்டவை.

இந்த ஆண்டில் மட்டும் டொராண்டோவில் 342 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது 2014, 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களைவிட அதிகமாகும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்