மொடலின் வாழ்க்கையை திகில் படம் போல் மாற்றிய தொழில்நுட்பம்: ஒரு எச்சரிக்கை செய்தி

Report Print Balamanuvelan in கனடா

தொழில் நுட்பம் எவ்வாறு டொராண்டோவைச் சேர்ந்த ஒரு மொடலின் வாழ்க்கையை நரகமாக்கியது என்பதை விவரிப்பதோடு இனி வரும் காலத்தில் இப்படியும் நடக்கலாம் என எச்சரிக்கிறது இந்த செய்தி.

தொழில் நுட்ப அம்சங்களுடன் ஆடம்பரமாக அமைந்திருந்த தனது கணவனின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும்போது, அதே தொழில்நுட்பமே தனக்கு வில்லனாகப் போகிறது என்பது மொடல் அழகியான Ferial Nijemக்கு தெரிந்திருக்கவில்லை.

டொராண்டோவைச் சேர்ந்த Ferial Nijem தனது கணவருடன் அமெரிக்காவில் உள்ள ஆடம்பட பங்களாவில் வசித்துவந்தார்.

தங்கள் வீட்டின் வெப்பநிலை, லைட், ஆடியோ சிஸ்டம், கெமராக்கள் என அனைத்தையும் அவர்களுடைய மொபைல் போனாலேயே கட்டுப்படுத்தும் வசதி இருவருக்கும் இருந்தது.

தனது மனைவி மீது அதிக பொசஸிவ் ஆக இருந்த Ferial Nijemஇன் கணவர், அவரை தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் ஒரு நபராக இருந்தார். பின்னர் அது சந்தேகமாக மாறத் தொடங்கியது.

குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கு பதிலாக, வீடியோ கால் செய்துதான் ஹாய் கூட சொல்லுவார், ’உன் கூட யார் இருக்கிறார்கள், அவர்களுக்கும் ஹாய் சொல்லு’ என்பதில் தொடங்கும் அவரது சந்தேக புத்தி.

வீடு முழுவதும் CCTV கெமராக்கள் பொருத்தப்பட்டிருக்க, 24 மணிநேரமும் தான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்தார் Ferial Nijem.

கடைசியாக இருவரும் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்பு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஆடம்பர பங்களாவாக விளங்கிய அதே வீடு, Ferial Nijemஇன் கண்வர் பிரிந்த பிறகு திகில் படங்களில் வரும் ஒரு பயங்கர வீடு போல் மாறியது.

வீட்டின் கண்ட்ரோல் முழுவதும் Ferial Nijemஇன் கணவரின் கையில் இருக்க, அந்த வீட்டை விட்டு போன பிறகும் வீட்டை கட்டுப்படுத்த ஆரம்பித்தார் அவர். Ferial Nijem என்ன செய்கிறார், யாருடன் இருக்கிறார் என்பது போன்ற விடயங்களை தொடர்ந்து கண்காணித்தார் அவர்.

அதனால், தான் இருக்கும் அறையின் விளக்குகளை Ferial Nijem அணைத்து விட்டாலும், அதை வைத்தே அந்த அறையில் அவர் இருப்பதை அறிந்து கொண்டு திடீர் திடீர் எனஆடியோவை இயக்குவதும் அணைப்பதும் என தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருக்க வீடு நரகமாயிற்று அவருக்கு.

பின்னர் ஒருவழியாக பொலிசாரை தொடர்பு கொண்ட Ferial Nijem, ஒரு மகளிர் அமைப்பில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 158 மில்லியன் வீடுகளில் இந்த ஸ்மார்ட் தொழில் நுட்பம் நிறுவப்பட இருக்கிறது.

எனவே தொழில் நுட்பம், துஷ்பிரயோகம் செய்பவர்கள் கையில் சிக்கினால் நன்மைக்கு பதில் தீமையையே உண்டு பண்ணும் என்றும் அதனால் ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுக்கமாறும் எச்சரிக்கிறது Ferial Nijemஇன் அனுபவம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்