சைக்கிள் பந்தயத்தில் தங்கம் வென்ற உலகின் முதல் திருநங்கை: ஆதரவும் எதிர்ப்பும்

Report Print Balamanuvelan in கனடா

பெண்களுக்கான சைக்கிள் பந்தயம் ஒன்றில் தங்கம் வென்ற திருநங்கைமீது வெண்கலம் வென்ற பெண் உட்பட பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் ஆதரவை விட அதிக எதிர்ப்பு அதிகம் உருவாகியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Rachel McKinnon தத்துவவியலில் துணைப்பேராசிரியராக பணி புரிகிறார்.

திருநங்கையான அவர் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் சைக்கிள் பந்தயத்தில் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கம் வென்றார்.

ஒரு திருநங்கை விளையாட்டு வீரரின் உடலில் குறிப்பிட்ட அளவுக்கு கீழ் டெஸ்டோஸ்டீரான் என்னும் ஹார்மோன் இருந்தால் அவர் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.

Rachel McKinnonஇன் டெஸ்டோஸ்டீரான் அளவு, விதிகளுக்குட்பட்டிருந்ததால் அவர் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் தங்கம் வென்றதும் பலர் அவர்மீது தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

வெண்கலம் வென்ற வீராங்கனையான Wagner-Assaliயே அவருக்கு எதிராக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

Rachel McKinnonக்கு தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது நியாயமற்றது என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான Carolien van Herrikhuyzen, பந்தயம் நேர்மையான முறையில் நடைபெற்றதாகவும், Wagner-Assaliக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அதை போட்டியிட்டு மூன்றாவது வருவதற்கு முன்னரே தெரிவித்திருக்க வேண்டும், எல்லாம் நடந்து முடிந்தபின் பேசக்கூடாது என்று கூறியிருந்தார்.

பின்னர் Wagner-Assali தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பார்ப்பதற்கு இது விளையாட்டு வீராங்கனைகள் இருவருக்கிடையே உள்ள பொறாமை போல தோன்றினாலும், இதன் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன.

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பாகுபாடுக்கு எதிரான சட்டங்களில் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி ஒரு தனிநபரின் பாலினம் என்பது மாற்றத்தக்கதல்ல, அதாவது பிறக்கும்போது ஒருவர் உடலில் எந்த பாலின உறுப்பு காணப்படுகிறதோ அதன்படிதான் அவர் ஆணா அல்லது பெண்ணா என முடிவு செய்யப்படுவார், பின்னர் அதை மாற்ற இயலாது.

ஆனால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் திருநங்கை போன்றோர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்.

இப்படி திருநங்கைகள் தொடர்பாக பல சர்வதேச பிரச்சினைகள் அலசப்பட்டு வரும் நிலையில் Rachel McKinnon தங்கம் வென்றதுதான் உண்மையான பிரச்சினையாகியிருக்கிறது.

இதற்கிடையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஆணாக இருந்து திருநங்கையாக மாறுவோருக்கான புதிய விதிகளை வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்