கனடா கௌரவ கொலை வழக்கு: நீதித்துறை அமைச்சருக்கு சிக்கல்?

Report Print Balamanuvelan in கனடா

கனடா குடியுரிமை பெற்ற இந்தியப் பின்னணி கொண்ட பெண் ஒருவரின் கௌரவக் கொலை வழக்கில் கனடா நீதித்துறை அமைச்சர் சட்டப்படி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதம் 8ஆம் திகதி, 2000ஆவது ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியாவின் Maple Ridgeஐச் சேர்ந்த Jaswinder Kaur Sidhu (25) இந்தியாவிலுள்ள பஞ்சாபில் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது கணவரான ஒரு ஏழை ரிக்‌ஷா ஓட்டுபவரான Sukwinder Singh Sidhuவும் தாக்குதலில் படுகாயமடைந்தார்.

அடியாட்களை ஏவி அவர்கள் இருவரையும் கொல்லத் தூண்டியதாக Jaswinder Kaurஇன் தாய் Malkit Kaur Sidhu மற்றும் அவரது மாமாவாகிய Surjit Singh Badesha ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு போக கனடாவுக்கு வந்த பொலிசார் கடைசி நிமிடத்தில் டொராண்டோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் வெறுங்கையுடன் நாடு திரும்பினர்.

இந்நிலையில் அந்த நேரத்தில் தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தப்பட்ட விதம் முறையற்றது என்று கூறி Malkit Kaur Sidhu மற்றும் Surjit Singh Badeshaவின் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர உள்ளனர்.

ரகசியமாக தங்கள் கட்சிக்காரர்களை இந்தியாவுக்கு அனுப்பி விட முடிவு செய்யப்பட்டதாகவும், அவர்களை விமான நிலையம் கொண்டு செல்லும் திட்டத்தால் பொலிசார் அதிக அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளதையடுத்து அந்த பொலிசாரையும் அவர்கள் குறுக்கு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

அதேபோல் இந்த விடயத்தில் ஃபெடரல் நீதித்துறை அமைச்சரான Jody Wilson-Raybouldஇன் நடவடிக்கைகள் சட்டத்தை நியாயமற்ற முறையில் கையாளும் வகையிலும், நீதியை நிலைநாட்டுவதற்கு இடைஞ்சலாகவும் இருந்ததாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளதால் அவருக்கும் சிக்கல் ஏற்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்