குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் கெடுத்த எழுத்துப் பிழை

Report Print Balamanuvelan in கனடா

ஒரு குழந்தை தனது குடும்பத்துடன் கனடாவில் பிறந்தநாளைக் கொண்டாட முடியாமல் போனதற்கு ஒரு டிராவல் ஏஜண்டின் அலட்சியப்போக்கு காரணமாக அமைந்துள்ளது.

கனடாவின் Metro Vancouverஇல் தனது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தனது மகன் Aradஇன் இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்திருந்தார் Arman Aria.

ஆனால் கனடாவில் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களில் பங்கு பெறுவதற்கு பதிலாக, குட்டி Aradம் அவனது தாயான Azadeh Lotfifarம் இரண்டு நாட்கள் ஈரானிலேயே மாட்டிக் கொண்டனர்.

இதற்கெல்லாம் காரணம், ஒரு டிராவல் ஏஜண்ட் செய்த ஒரு எழுத்துப் பிழை. பிரபல தனியார் டிராவல் ஏஜன்சி ஒன்றில் பணிபுரியும் ஒரு ஏஜண்ட், குழந்தை Aradஇன் விமான டிக்கெட்டில் அவனது நடுப்பெயரை தவறாக அச்சிட்டு விட்டார். அதை Aradஇன் தாய் சுட்டிக் காட்டியபோதும் அது பெரிய பிரச்சினை இல்லை என்று கூறிவிட்டார் அந்த ஏஜண்ட்.

ஆனால் ஈரானிலிருந்து கனடா புறப்படும்போது விமான நிலையத்தில் தாயும் மகனும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குடும்பத்துடன் பிறந்தநாளையும் கொண்டாட இயலாமல் போனது, மீண்டும் டிக்கெட் பிரச்சினையை சரி செய்ய அலைச்சல், பின்னர் புதிய டிக்கெட்டுகள் வாங்குவதற்கு செலவு என வரிசையாக பிரச்சினைகளை சந்தித்த குடும்பம், கடைசியாக நீதிமன்றத்தை அணுகியது.

பிரச்சினைகளுக்கு ஏஜண்டின் தவறுதான் காரணம் என்பதை உறுதி செய்து கொண்ட நீதிமன்றம், டிக்கெட்களுக்கான செலவு, ஈரானில் ஹோட்டலில் தங்கியது மற்றும் உணவுக்கான செலவு என மொத்தம் 1,100 டொலர்களை இழப்பீடாக வழங்கும்படி டிராவல் ஏஜன்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்