கார் பார்கிங்கில் நின்று கொண்டிருந்த வயதான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கார் பார்க்கில் நின்று கொண்டிருந்த வயதான பெண் மீது கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள பார்க்கிங்கில் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்த போது கார் ஒன்று வேகமாக அவர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்